பள்ளிகளில் நீச்சல் குளம் அமைக்க கட்டுப்பாடு

பள்ளிகள் மற்றும் பிற பகுதிகளில் நீச்சல் குளம் அமைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, மாநகராட்சி ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே நீச்சல் குளம் கட்ட வேண்டும் என புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே. பி. முனுசாமி நேற்று சட்டமன்றத்தில் கொண்டு வந்த சட்ட
முன்வரைவில் மாநகராட்சி ஆணையரின் அனுமதி இன்றி எந்த ஒரு கட்டடத்திலும் நீச்சல் குளம் கட்டக் கூடாது. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள நீச்சல் குளங்களை பயன்படுத்தி வரும் உரிமையாளர்கள், உடனடியாக மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் செயல்படும் தனியார் பள்ளியில் பயின்று வந்த நான்காம் வகுப்பு மாணவன் எம்.ராஜன், பள்ளியில் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்தான். இதையடுத்து, பள்ளிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிதாக நீச்சல் குளம் கட்டுவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு மேம்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...