வகுப்பறைகளில் கூட விஞ்ஞானத் தேடல் இல்லை: நீதிபதி கே.சந்துரு

வகுப்பறைகளில்கூட விஞ்ஞானத் தேடல் இல்லாத நிலைதான் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் "துளிர்' என்ற சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழின் வெள்ளி விழா மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:
தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் அறிவியல் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு நிகராக மூட நம்பிக்கைகளும் வளர்ந்து வருகின்றன.
சென்னை ஐ.ஐ.டி.யில் நாடி ஜோதிடம் தொடர்பான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதற்கும் அறிவியலுக்கும் தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக இந்த வகுப்புகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
அறிவியலில் விண்வெளி அறிவியல் (ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்) உண்டு; ஜோதிடம் (ஆஸ்ட்ராலஜி) கிடையாது.
இப்போது வாஸ்து சாஸ்திரத்தால் மக்கள் படாதபாடு படுகின்றனர். நீதிபதிகளிடம்கூட இதுபோன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்ப்பதன் மூலம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்கலாம்.
அயர்லாந்து நாட்டில் இருந்து வந்து நமது நாட்டில் அன்னிபெசன்ட் அம்மையார் சீர்திருத்தப் பணிகளைச் செய்தார். ஆனால், அங்கேயே கருச்சிதைவுக்கு எதிரான தடை இப்போதும் அமலில் உள்ளது. இதன்காரணமாக, இந்தியரான சவிதாவுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் அவர் உயிரிழந்தார்.
தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தானின் "ஸ்வாட்' பள்ளத்தாக்கில் பெண் கல்விக்குத் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பெண் கல்விக்காக குரல் கொடுத்த இளம்பெண் மலாலா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அந்த இளம்பெண்ணின் குரல் கல்விக்கான குரலாக உலகம் முழுவ
தும் இப்போது ஒலிக்கிறது.
சிவசேனையின் தலைவர் பால்தாக்கரே இறந்த நாளில் மும்பை முடங்கியது தொடர்பாக இரண்டு பெண்கள் "பேஸ்புக்' இணையதளத்தில் கருத்து தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக உள்ளது. மக்களிடம் அறிவியல் பூர்வமான சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இயக்குநர் பாரதிகிருஷ்ணகுமார் பேசும்போது, "தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் துளிர் புத்தகத்தை துணைப்பாட நூலாக வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 6,7,8 வகுப்புகளிலாவது இந்த நூலை துணைப்பாட நூலாக வைக்க கல்வித் துறை அதிகாரிகள் பரிந்துரைக்க வேண்டும்' என்றார்.
சிறப்பு அஞ்சல் உறையையும் குல்பீர் சிங் வெளியிட்டார். துளிர் இதழின் 25 ஆண்டு இதழ்கள் அடங்கிய சி.டி.யை நீதிபதி கே.சந்துரு வெளியிட்டார்.
துளிர் இதழின் ஆசிரியரும், பேராசிரியருமான ஆர்.ராமானுஜம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் என்.மணி, விஞ்ஞான் பிரசார் அமைப்பின் பதிவாளர் த.வி.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ச.மாடசாமி உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...