மாற்றுத் திறனாளிகள் அரசுப் பணி பெற தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ்

மாற்றுத் திறனாளிகள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர். நடராஜ் கூறினார்.
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான பணி வாய்ப்பு கலந்தாய்வு மற்றும் வழி காட்டுதல் கருத்தரங்கம் நொளம்பூர் நேத்ரோதயா தன்னார்வ அமைப்பில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பார்வை குறைபாடு உடைய
மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பார்வையற்றவர்களுக்கான பல்வேறு கருவிகளை கண்டுபிடித்த மிலன் தாஸ் மற்றும் ஆர். நடராஜுக்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர். நடராஜ் பேசியது: இந்த விருது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும், தமிழக அரசையுமே சாரும். பார்வையற்றவர்கள் உள்பட மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகையை அளிப்பது அரசின் கடமை. இது மாற்றுத்திறனாளிகளின் உரிமை.
நாட்டின் மக்கள் தொகையில், 5 முதல் 6 சதவீதம் வரையிலானவர்கள் மாற்றுத் திறனாளிகள். ஆனால் இதில் பார்வையற்றவர்கள் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இது அவர்களுக்கு சலுகைகளை அளிப்பதில் தடையாக உள்ளது.
சில மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணி கிடைத்தாலும் அதனை சில காரணங்களால் பெறுவதில்லை. அவர்கள் பணியில் சேர்ந்து, சில ஆண்டுகளுக்கு பின்னர் வேண்டிய இடத்துக்கு மாறுதல் பெற்றுக் கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளிகள் எந்த அரசுப் பணிகளைப் பெறுவதற்கு தொண்டு நிறுவனங்கள் அறிவுரை வழங்கவேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவை உதவ வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள் பணி செய்யும் இடத்தில் அவர்களுக்கு உள்ள பணிச்சூழலை தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும், என்றார் ஆர். நடராஜ்.
நிகழ்ச்சியில் மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வி.கே. ஜெயக்கொடி, மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் துணை இயக்குநர் கே.பி. ஸ்ரீனிவாசன், திரைப்பட பின்னணி பாடகர் முகேஷ், இந்திய கடற்படையின் ஓய்வுபெற்ற கமாண்டர் ஆர்.எஸ். வாசன், நேத்ரோதயா அமைப்பின் நிறுவனர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...