செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல்

செவ்வாய் கிரகத்தில் புழுதி புயல் ஏற்பட்டுள்ளதை, "கியூரியாசிட்டி' விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து, 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து,
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள், பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.இது தொடர்பாக மேலும் ஆராய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரோவர் விண்கலம் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்டில் தரையிறங்கியது. ரோவர் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "கியூரியாசிட்டி' என்ற ரோபோ வாகனம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து வருகிறது.கடந்த, 10ம் தேதி, செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட, புழுதி புயலை பதிவு செய்து கியூரியாசிட்டி, படம் பிடித்து அனுப்பியுள்ளது. இந்த படத்தை, நாசா விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...