அரசு செய்திகள் "இன்டர்நெட்' மூலம் தெரிவிக்க ஏற்பாடு

அரசு செய்திகள், திட்டங்கள் குறித்து இன்டர்நெட் மூலம் உடனுக்குடன் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் நெல்லையில் 4 மாவட்ட அளவில் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அரசு செய்திகள் உடனுக்குடன் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி பயிற்சிகள், கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

தற்போது கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தின் மூலம் இன்டர்நெட் உதவியுடன் அரசு செய்திகள் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் தனி வெப்சைட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்ட அளவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அரசு செய்திகள், திட்டங்கள் இன்டர்நெட் மூலம் பத்திரிக்கைகளுக்கு அனுப்பபடுகிறது. இந்த சேவையை மேம்படுத்தும் வகையில் பி.ஆர்.ஓக்கள், ஏ.பி.ஆர்.ஓக்கள், கணக்கர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்கள் அளவிலான செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.இதில் பி.ஆர்.ஓக்கள் மதிமாறன் (நெல்லை), தமிழ் இனியன் (தூத்துக்குடி), மாரியப்பன் (விருதுநகர்), ஏ.பி.ஆர்.ஓக்கள் நவாஸ்கான், ஜெகவீரபாண்டியன், கதிரவன், தங்கவேலு, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதில் சென்னை திரைப்பட பிரிவு இன்ஜினியர் முருக பூபதி, சென்னை தொழில் நுட்ப அலுவலர் இன்ஜினியர் யோகேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் விதம், டவுன் லோடு, அப்லோடு, செய்திகள், படங்கள் அனுப்பும் விதம், இன்டர்நெட் பயன்பாடு, போட்டோ ஸ்கேனிங் உட்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...