கட்டடப் பணிகள்: தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கட்டடப் பணிகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழரசு பேசியது:
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள்
அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வகுப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் தொட்டி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் சீர்குலையாமல் ஆசிரியர்கள்தான் பாதுகாக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள கல்விக் குழுவை அந்தப் பகுதியில் உள்ள ஆசிரியர்கள் அவசியம் கூட்டி, மாணவர்களின் கல்வித் தரத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆங்கில மொழியை மாணவர்கள் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலேயே நன்றாகப் பயின்று அதில் பேசும் திறனை அதிகரிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளங்கோவன் வரவேற்றார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஜெயக்குமார், ராமலிங்கம், விஷ்ணுப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...