கோவையில் குழந்தைகள் கொலை வழக்கு - போலீஸ் பாட திட்டத்தில் சேர்க்க பரிந்துரை : ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு தகவல்


கோவையில் நடந்த குழந்தைகள் கொலை வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு விவரத்தை, தமிழ்நாடு போலீஸ் பயிற்சி கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்க, அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்,'' என, கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.

கோவையில், பள்ளிக் குழந்தைகள் முஸ்கான், ரித்திக் ஆகியோரை பணத்துக்காகக் கடத்தி, சிறுமியை, "நாசம்' செய்து,

அவர்களை கொடூரமாகக் கொலை செய்த வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டில் நடந்தது.
கடந்த, 1ம் தேதி, வழக்கின் குற்றவாளியான மனோகரனுக்கு, இரட்டை தூக்கு மற்றும் மூன்று ஆயுள் தண்டனைகளை, நீதிபதி சுப்ரமணியம் தனது தீர்ப்பில் அறிவித்தார். இத்தீர்ப்பினை, போலீசார் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், கோவை வந்த தமிழகக் கடலோரக் காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு, பீளமேட்டிலுள்ள, தனியார் மருத்துவமனையின் விருந்தினர் மாளிகையில், இவ்வழக்கில் பணியாற்றிய, மாவட்ட எஸ்.பி., உமா, டி.எஸ்.பி.,க்கள் பாலாஜிசரவணன், முத்துராஜ், இன்ஸ்பெக்டர்கள் கனசபாபதி, அண்ணாதுரை, முருகவேல், முத்துமாலை, சுகுமார், எஸ்.ஐ.,கள் ஜோதி, ராஜேந்திரன், மோகன், பூவாத்தாள், ஏட்டுகள் ஆறுமுகம், ஹரிதாஸ், அண்ணாதுரை, உதவி துணை கமிஷனர் (ஓய்வு) நந்தகுமார், உதவி கமிஷனர் (ஓய்வு) குமாரசாமி உள்ளிட்ட தனிப்படையினரைச் சந்தித்தார்.

அப்போது, ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியதாவது: தனிப்படை போலீசார் குழுவாகச் செயல்பட்டு, இவ்வழக்கை விரைவாக முடிக்கத் துரிதமாகச் செயல்பட்டுள்ளனர். வழக்கில், அரசு சாட்சிகள் ஒருவர் கூட, பிறழ்சாட்சியாக மாறாதது குறிப்பிடத்தக்கது. குற்றவாளி மனோகரனுக்கு அதிகபட்சமாக இரட்டை தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்குப் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தீர்ப்பு, கோவை போலீசாருக்கு மட்டுமின்றி, தமிழக போலீசாருக்கு பெருமை சேர்த்துள்ளது. இவ்வழக்கின் விசாரணை அறிக்கை, கோர்ட் விவாதங்கள், தண்டனை விவரம் ஆகியவற்றை, தமிழ்நாடு போலீஸ் பயிற்சி கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க, அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...