ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மேலும் ஒரு நாள் நீட்டிப்பு


ஆசிரியர் தகுதத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதி மறுதேர்வு கடந்த மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இம்மாதம் 2-ம் தேதி வெளியிடப்பட்டது.
 திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில்
425 பேர், இடைநிலை ஆசிரியர் தேர்வில் 394 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 819 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
 இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி கடந்த 6-ம் தேதி முதல் பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
 முதல் இரண்டு நாள்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
 இந்நிலையில், வியாழக்கிழமை இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்பணி வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறுகிறது.
 இந்த நான்கு நாள்களும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 4 நாள்களும் கலந்துகொள்ள முடியாதவர்கள் 10-ம் தேதி கலந்துகொள்ளலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப. கிரேஸ் சுலோச்சனா ரத்தினாவதி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...