பல்கலையில் ஆட்குறைப்பு இல்லை : ஊழியர்கள் கொண்டாட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், ஊதியம் குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு இல்லை' என்ற அறிவிப்பு வந்ததை அடுத்து, ஊழியர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், நிதி நெருக்கடி காரணமாக, ஊதியம் மற்றும் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது
. இதைக் கண்டித்து ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால், பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக, அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை, பல்கலை நிர்வாக சிண்டிகேட் கூட்டம், சென்னையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும், வெளியே வந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன், ""ஊதியம் குறைப்பு, ஆட்குறைப்பு இல்லை,'' என்றார். இதைத் தொடர்ந்து, ஊழியர்கள், தொலை தூரக் கல்வி இயக்ககம் எதிரில், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...