டி.என்.பி.எஸ்.சி., குற்றவாளி ஹகன் வாக்குமூலம்:தேர்வுத்துறை நடத்திய தேர்வுகள் ரத்தாகுமா?

டி.என்.பி.எஸ்.சி., முக்கிய குற்றவாளி, ஹகனிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நடத்திய விசாரணையில், குரூப் - 4 தேர்வு முதலாக, தேர்வுத்துறை நடத்திய பல தேர்வுகளின் வினாத்தாள் வெளியாகியது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், தேர்வுத்துறை நடத்திய, சமீபத்திய தேர்வுகள் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், ஆகஸ்ட், 12ல் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வில், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வுக்கு முன், ஈரோடு, அரூர் ஆகிய இடங்களில், வினாத்தாள் வெளியாகி, தேர்வு ரத்தானது.

ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில், தனக்கொடி, சென்னை பாலன் என்ற ஸ்ரீதர்ராஜ் உட்பட,

11 பேரை கைது செய்தனர். வினாத்தாள் வழங்கியதாக, ஆந்திராவை சேர்ந்த, மத்திய ரயில்வே ஊழியர், ஆனந்தராவ் என்பவரை, விசாகப்பட்டினத்தில், செப்டம்பர் 6ல் கைது செய்தனர்.இவ்வழக்கு, கோவை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆனந்தராவ் உள்ளிட்டவர்களை, சி.பி.சி.ஐ.டி.,போலீசார் இரண்டாவது முறையாக, காவலில் எடுத்து விசாரித்ததில், முக்கிய குற்றவாளியான, ஒடிசாவை சேர்ந்த ஹகன், புவனேஸ்வரில் வழக்கறிஞர் பணி செய்து வருவதும் தெரிய வந்தது.

தனிப்படை போலீசார், கோல்கட்டாவில் தலைமறைவாக இருந்த, ஹகனை கைது செய்து, நேற்று முன்தினம், பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், கைதான ஹகனின் நண்பர், புவனேஸ்வரைச் சேர்ந்த, கோத்ரா மோகன் நந்தன் என்பவர், பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். தமிழகத்தில் நடந்த, தேர்வுத்துறை தேர்வுகளுக்கு, இவரது அச்சகத்தில் வினாத்தாள்கள் பிரிண்ட் செய்யப்பட்டது. இருவரும் சேர்ந்து, தேர்வுக்கு முன், தமிழகத்தில் வினாத்தாளை விற்பனை செய்துள்ளனர் என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.

இதுவரை, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, எந்தெந்த தேர்வுகளுக்கு, கோத்ரா மோகன் நந்தனின், அச்சகத்தில் கேள்வித்தாள் பிரின்ட் செய்யப்பட்டது; குரூப் - 4 மற்றும் குரூப் - 2 தேர்வுகளின் போது, யாரெல்லாம் இவர்களிடம், வினாத்தாள் வாங்கியுள்ளனர். இவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிய, கோத்ரா மோகன் நந்தனை, கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்து உள்ளனர்.கோத்ரா மோகன் நந்தன் கைது செய்யப்பட்டால், குரூப் - 4 தேர்வில், வினாத்தாள் வாங்கியவர்களும் கைது செய்யப்படலாம் என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...