"கண்ணீரே வராமல் தடுப்பவன் நண்பன்'


:பள்ளியில் மாணவன், ஆசிரியர் இருவரும் இரு கண்களைபோல் இருக்க வேண்டும். சிறந்த ஆசிரியரால் மட்டுமே நல்ல மாணவனை உருவாக்க முடியும். அதன் மூலமே அவன் எதிர்காலமும் பிரகாசமாகும். சரியான முறையில் எதிர்பார்த்த கல்வி கிடைக்காததால் தான், நம் நாட்டில் வன்முறை, கலவரம், தீவிரவாதம் உருவாகிறது. குருவை மதிக்கத்தெரிந்தவன்
மட்டுமே புகழ் பெறுவான். கற்க வேண்டிய பருவத்தில் நன்முறையில் முழு மனதுடன் கற்றால் மட்டுமே அது களவற்ற கல்வி.அன்றைய மாணவர்களுக்கும், இன்றைய
மாணவர்களுக்கும் வேறுபாடுகள் ஆயிரம்; இன்றைய மாணவர்கள் கல்வியை மறந்து காதலை பெரியதாக நினைக்கின்றனர். கடமை மறந்து, ஆசிரியர், பெற்றோரை மறந்து, பிறந்த மண்ணை மறந்து பாதை மாறி, விழித்துக் கொண்டே செல்கின்றனர். நல்ல கல்வி கற்ற ஒரு மாணவன் எப்போதும் பாதை மாற மாட்டான்.
தன்னிடம் படித்த மாணவன், நல்ல பதவியுடன் உயர்ந்து நின்று, வாழ்வில் வளம் பெற்றான் என்று கூறுவதை தவிர, ஆசிரியருக்கு வேறு பெருமை கிடைக்காது. அதையே இன்றைய ஆசிரியர்
களும் விரும்புகின்றனர். பிடிப்பான வாழ்க்கை வேண்டாம்; பிடித்த வாழ்க்கையில் சிறப்பாக இருக்க முயற்சியுங்கள்.
எந்தவொரு மாணவனுக்கு நல்ல நண்பன் அமைகிறானோ, அவன் வாழ்க்கை சிறக்கும்; நல்ல ஆசிரியரும் கிடைத்துவிட்டால் வாழ்வு பூத்துக்குலுங்கும். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்கும் சிற்பிகளாக மாறி பணியாற்றுங்கள். கண்ணீரை துடைப்பவன் நண்பன் அல்ல; கண்ணீரே வராமல் தடுப்பவனே நண்பன். நண்பனுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள், என்றார்.
கடந்த 54ம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை படித்த 300 மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். கடந்த 1954ல் பள்ளியின் முதல் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழா நிறைவில்,முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி, குடும்ப உறவுகளை அறிமுகப்படுத்தி, கண்ணீருடன் விடை பெற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...