அண்ணாமலை பல்கலை நிதி நெருக்கடி குறித்து விசாரணை : அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

அண்ணாமலை பல்கலையில், நிதி நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய, பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு விசாரணை நடத்த வேண்டும், என அனைத்து பல்கலை அலுவலர் சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறினார்.

அவர் கூறியதாவது: அண்ணாமலை பல்கலை
ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு, 50 சதவீதம் ஊதியம் என்றும், 50 சதவீதம் ஆட்குறைப்பு செய்யவும் முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேவையற்ற பணி நியமனங்களை செய்துவிட்டு, நிதி நெருக்கடி என காரணம் காட்டி, 13 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் முடிவெடுத்திருப்பது, பல்கலையின் மாண்பிற்கு ஏற்றதல்ல. நிதி நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய பல்துறை அறிஞர்களை கொண்டு, அரசு விசாரணை நடத்தவேண்டும். ஆசிரியர், அலுவலர் பணி நியமனம் குறித்த விதிகளை, அண்ணாமலை பல்கலையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். துணைவேந்தர் பதவிக்கு, குழு அமைத்து சிறந்த கல்வியாளர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு, பாதி சம்பள அறிவிப்பை, திரும்ப பெறவில்லை எனில், போராட்டங்கள் நடத்தப்படும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...