மதிப்பூதியம் கிடைக்கலைஆசிரியர்கள் கவலை

பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு இன்னும் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.
கடந்த மே
மற்றும் ஜூன் மாதங்களில் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் என 447 பேர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். ஒரு பகுதிக்கு 4,500 ரூபாய் வீதம்,
ஒருவருக்கு 4 பகுதிகள் வரை ஒதுக்கப்பட்டது. இப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பூதியம் வழங்க வேண்டும்.தலைமையாசிரியர்கள், மேற்பார்வையாளர்களாக செயல்பட்டதால், அவர்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பூதியம் வழங்க வேண்டும். நான்கு மாதங்களாகியும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்களுக்கு, மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.

இது, ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கடாசலத்திடம் கேட்ட போது,""இன்னும் பலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை முழுமையாக முடித்து தராமல் உள்ளனர். அதனால், மதிப்பூதியம் தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்களுக்கான மதிப்பூதியம் வந்துவிட்டது; தீபாவளிக்கு பிறகு வழங்கப்படும்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...