ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு? மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்

நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி, அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 பேரை பணி நியமனம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி உத்தரவிட்டார். பணியேற்ற 5 பேரில் 2 பேர் முழு ஊதியம் பெற்றுள்ளனர். 3 பேரின் ஊதியம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆட்சேபனையால் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த வியாழக்கிழமை சென்னையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாகை உள்பட சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந் நிலையில், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி வெள்ளிக்கிழமையும், அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவனை சனிக்கிழமையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...