பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு

பள்ளி செல்லாத குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு
நவ., மாதத்திலும் பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிய தமிழக அரசு உத்தரவிட்டது. பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் மேற்பார்வையாளர் கீதா தலைமையில் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் தேன்மொழி, ப்ரியா உள்ளிட்டோர் ஆனைகட்டி, சின்னதடாகம் மற்றும் பாலமலை வட்டாரத்தில் மலைவாழ் கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.
இதில், பள்ளி செல்லாமல் இருந்த குழந்தைகள் மற்றும் பள்ளிகளில் இருந்து இடையில் நின்றவர்கள் உள்ளிட்டோர் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...