கேட் தேர்வில் யார் அதிகம்?

இந்த ஆண்டு கேட் தேர்வுக்கு விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
கேட் நுழைவுத் தேர்வு அக்., 11ம் தேதி தொடங்கியது. வரும் நவ., 6 வரை நடக்கிறது. தேர்வு முடிவு 2013 ஜன., 9ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்தியாவில் உள்ள 13 இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்கள், 100 தனியார் கல்வி நிறுவனங்களில், மேலாண்மை படிப்புகளில் சேர்வதற்கு
கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கேட் தேர்வுக்கு, 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 4.2 சதவீதம் அதிகம். விண்ணப்பித்த மாணவிகளின் எண்ணிக்கையும் 8.6 சதவீதம் அதிகரித்தது.
விண்ணப்பித்துள்ளவர்களில் 67.6 சதவீதம் பேர் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து 31,040 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்தபடியாக, உத்தரபிரதேசத்தில் இருந்து 25,270 பேரும், டில்லியில் இருந்து 21,507 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
டாப்  5 நகரங்கள்
* டில்லி  21,224 பேர்
* பெங்களூரு 19,553 பேர்
* மும்பை  16,895 பேர்
* ஐதராபாத்  16,138 பேர்
* புனே  13,368 பேர்

தேர்வு முடிவுகளில், எந்தெந்த மாநிலம் எந்த இடத்தை பெறுகிறது என்பதை, பொறுத்திருந்து பார்க்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...