மாற்றுப் பள்ளிகள் செயல்பட நடவடிக்கை தேவை

திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் செயல்படாத மாற்றுப் பள்ளிகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ், பள்ளிகளிலிருந்து இடைநின்ற மாணவ, மாணவிகளின் நலன்கருதி மாற்றுப் பள்ளியை தமிழக அரசு நடத்தி வருகிறது.
இந்தப் பள்ளியில் ஓராண்டு படித்து
முடித்த மாணவர்கள், பின்னர் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்து தங்கள் படிப்பைத் தொடரலாம்.
இந்நிலையில், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்கு உள்பட்ட எம்.தாங்கல், லாலாபேட்டை, பெரிய பகண்டை, ஏந்தல், பெரிய மணியந்தல் ஆகிய கிராமங்களில் இந்தாண்டு மாற்றுப்பள்ளி தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மையத்துக்கும் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், தொடங்கப்பட்டதோடு இந்த மையங்கள் செயல்படாமலேயே நிற்கிறது. எந்த நோக்கத்துக்காக இந்தக் கிராமங்களில் மாற்றுப்பள்ளியை அரசு கொண்டுவந்ததோ, அது நிறைவேறாமலேயே உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.அன்பரசனிடம் கேட்ட போது, மழுப்பலான பதிலைத் தெரிவித்தார். எனவே, அரசின் நிதி விரயமாவதைத் தடுத்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...