"போர்லாக்' விருது: விவசாய ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் தேர்வு

விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு வழங்கப்படும் "போர்லாக்' விருதுக்கு இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 2 விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் பாஸ்மதி அரிசி குறித்த ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருபவர்கள். கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், நோபல் பரிசு
பெற்ற விஞ்ஞானி டாக்டர் நார்மன் போர்லாக் பெயரில் வழங்கப்படும் இந்த விருதுக்கு 30 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் 5 பேர் கொண்ட தேர்வுக்குழு, இந்த ஆண்டுக்கான "போர்லாக்' விருதுக்கு டாக்டர் கே.வி.பிரபு, டாக்டர் அசோக் குமார் சிங் ஆகிய இருவரைத் தேர்ந்தெடுத்தனர்.
இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியது:
பாஸ்மதி அரிசி பயிரின் தரத்தை மேம்படுத்தி, அதன் உயரத்தைக் குறைப்பது குறித்த ஆராய்ச்சி 1965ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக மகசூலை அளிக்கவல்ல குறைந்த உயரத்திலான பயிர்கள், அதற்கான சிறந்த பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கான ஆராய்ச்சி, சில நேரங்களில் சவால் நிறைந்தாக உள்ளது.
பாரம்பரியமாக பயிரிடப்படும் பாஸ்மதி அரிசி பயிர்கள் மிக உயரமானதாக உள்ளன. அதிகப்படியான மழை பெய்தால் அவ்வகைப் பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும். தற்போது விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இருவரும் "பூசா பாஸ்மதி 1121', "பூசா பாஸ்மதி 6' மற்றும் "பூசா பாஸ்மதி ஆர்.எச்.10' ஆகிய புதிய ரக பாஸ்மதி அரிசி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் என்றார் அவர்.
புதுதில்லியில் நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும் விழாவில் "போர்லாக்' விருதுடன், ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு, தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
விழாவில், இந்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் டாக்டர் மான்டெக் சிங் கலந்து கொண்டு, விருதுகளை வழங்குகிறார். "உணவுப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு' எனும் தலைப்பில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ராபர்ட் ஜிக்ளர் கோரமண்டல் சொற்பொழிவு ஆற்ற உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...