மாற்றங்களை ஏற்படுத்த சமமான கல்வி அவசியம்

"பள்ளியின் மூலம் சமூகம் எதிர்நோக்கும் மாற்றங்களை ஏற்படுத்த அனைத்து தரப்பு மக்களும் சமமான கல்வி பெற வேண்டும்,' என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் நடந்த உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் வட்டார அளவிலான உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்டத்தில்
ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் வட்டத்தின் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி பேசுகையில், "" பள்ளியின் மூலம் சமூகம் எதிர்நோக்கும் மாற்றங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் நல்ல பொறுப்புணர்வுடன் விரும்பத்தக்க செயல்பாடுகளை கொண்ட பண்பட்ட நபராய் இருக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம்.

இன்றைய சமூக சூழலில் நிலவும் வறுமை, ஏற்றத்தாழ்வு, வசதியின்மை போன்றவை இந்நோக்கத்திற்கு இடையூறாய் அமையும் போது சில குழந்தைகளின் பள்ளி படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே நமது கிராமங்களில், வருங்கால சமுதாய இளைஞர்கள் அனைவரும் சமமான கல்வி பெற குறைந்தபட்சம் கல்வியறிவு 10ம் வகுப்பு வரையிலாவது படித்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் கூறப்பட்ட ஐந்து குறிக்கோள்களை பள்ளியின் மேலாண்மை வளர்ச்சி குழு பங்கெடுத்து, அனைவரும் ஒன்றுபட்டு சிறப்பாக செயல்பட வேண்டும்,''

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...