ஆசிரியர் தகுதி மறுதேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்

ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நவம்பர் 6 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. மொத்தம் 6.56 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில் 10,397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும்
வெற்றி பெற்றனர்.
நவம்பர் 6, 7 ஆம் தேதிகளில் இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நவம்பர் 8, 9 தேதிகளில் முதல் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.
முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த சான்றிதழ் சரிபார்ப்பை கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில 17 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...