தரமான கல்வி, நலவாழ்வு, சுகாதாரம் குறித்து பள்ளிமேலாண்மை குழு, ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி வளர்ச்சிக்கும், சமுதாயத்திற்கும் நல்ல பாலமாக செயல்படும் பள்ளி மேலாண்மை குழுவிற்கு தரமான கல்வி, சுகாதாரம், நலவாழ்வு குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வரும் 19ம் தேதி துவங்குகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த குழு
பள்ளி வளர்ச்சிக்கும், சமுதாயத்திற்கும் நல்ல ஒரு பாலமாக விளங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த குழுவின் செயல்பாடுகள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவி புரிவதுடன் கல்வி நிர்வாகம் செம்மையாக செயல்பட உதவுகிறது.
அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் ( 6 முதல் 14 வயது) பள்ளியில் சேர்த்தல், பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல்
சமூக ஆண், பெண் இன வேறுபாட்டினால் மாணவர்களின் கற்றல் அடைவுகளில் ஏற்படும் இடைவெளியை முற்றிலுமாக களைதல் என அனைத்திலும் முனைப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு பள்ளியையும் இலவசக் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை கொண்ட பள்ளிகளாக மாற்றுவதற்கான பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் தயாரித்த பள்ளி வளர்ச்சி திட்டம் பற்றிய விபரங்களை அனைத்து வட்டார வளமைய அளவில் பராமரிக்கும் விதமாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி எஸ்.எம்.சி பி.ஆர்.ஜெ டிரைனிங் என்ற தலைப்பின் கீழ் மூன்று நாட்கள் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் (நான் ரெசிடன்சியல் டிரைனிங்) பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சியின் நோக்கம்
அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தல், அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் முக்கிய உட்கூறுகளை அறியச் செய்தல், குழந்தையின் உரிமைகள், உடல்நலம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தை அறியச் செய்தல், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணிகளை அறியச் செய்தல், பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், கல்வி சார்ந்த பிரச்னைகளை அறியச் செய்தல், தமிழக அரசின் நலத்திட்டங்களை அறியச் செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கான பயிற்சி வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் தூத்துக்குடி டூவிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடக்கிறது. இந்த பயிற்சியில் அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள், ஒரு பள்ளி தொகுப்பு கருத்து ஆய்வு மையத்திற்கு ஒரு தலைமையாசிரியர் வீதம் கலந்து கொள்ள வேண்டும்.
பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு முதல் பேட்ஜ் வரும் 26, 27ம் தேதிகள் மற்றும் டிசம்பர் 3ம் தேதி ஆகிய மூன்று நாட்களும், இரண்டாவது பேட்ஜ் டிசம்பர் 4, 5ம் தேதிகள் மற்றும் 12ம் தேதி ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த பயிற்சியை பயிற்சி பெறுவோர் நல்ல முறையில் பெற்று கொள்ள வேண்டும்.
இரண்டு நாட்கள் நடக்கும் பயிற்சியில் இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் குழந்தைகளின் உரிமைகள், தரமான கல்வி, நலவாழ்வு, சத்துணவு மற்றும் சுகாதாரம், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திடக்கூறுகள், யோகா, பள்ளி மேலாண்மைக்குழு, பள்ளி வளர்ச்சித்திட்டம், பதிவேடுகள் பராமரிப்பு, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த தலைப்புகளில் பயிற்சி நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சிக்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அதிகாரியும், முதன்மை கல்வி அதிகாரியுமான ராமச்சந்திரன் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...