சமச்சீர் கல்வி திட்டத்தில் புதிய அட்டை வினியோகம்

செயல்வழிக் கற்றல் அட்டைகள், இப்போது சமச்சீர் கல்வி புத்தகத்துடன் தொடர்பு கொண்டதாக மாற்றி வெளியிடப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 1836 பள்ளிகளுக்கு புதிய அட்டைகள் நேற்று வழங்கப்பட்டன.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செயல்வழிக் கற்றல் கல்வி முறையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி
முறையும் அறிமுகம் செய்யப்பட்டது. சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டபின், இத்திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் குழப்பம் நீடித்தது. சமச்சீர் கல்வி புத்தகத்தில் உள்ள பாடங்களுக்கும், அட்டைகளுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்ததே காரணம். இந்த குழப்பத்தை தவிர்க்க, கடந்த ஆண்டு ஏ.பி.எல். அட்டை வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களுடன் தொடர்புடைய, எளிமைப்படுத்தப்பட்ட புதிய அட்டைகளை அனைவருக்கும் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, புதிய அட்டைகள் நேற்று வழங்கப்பட்டன.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறிய
தாவது:புதிய அட்டைகளில் உள்ள பாடக் கருத்தும், பாடப் புத்தகங்களில் உள்ள கருத்தும் ஒத்துப் போவதால், குழந்தைகளால் ஆர்வமுடன் கற்க முடியும். கற்றலுக்கு வலுவூட்டுவதாக புதிய அட்டைகள் அமைந்துள்ளன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 1836 பள்ளிகளுக்கு அட்டைகள் வழங்கப்படுகின்றன.கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் 135 சிறப்பு பள்ளிகளுக்கும் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கற்றலை இனிமையாக்கும் புதிய வண்ண அட்டைகள், குழந்தைகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்த உதவும். இவற்றை முறையாக பயன்படுத்தி குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு, திருவளர் செல்வி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...