ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் துவக்கம்

தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில் முன்னோட்டமாக திருச்சியில் உள்ள 5 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஸமார்ட் கார்டுகள்
வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலம், மாணவ மாணவியரின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, வருமானம், பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்தவகை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். அரசு வழங்கும் நலத்திட்டங்களுக்கு மாணவ மாணவியர்களை தேர்வு செயய இந்த ஸ்மார்ட் கார்டு பயன்படும். இந்த திட்டத்தின் மூலம் 91 லட்சத்து 54 ஆயிரத்து 741 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். ஹெல்த் கார்டுடன், ஸ்மார்ட் கார்டும் ஒருங்கிணைக்கப்படும், இந்த திட்டம் படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும். மேலும் 2011-12ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 4,60,779 மாணவ மாணவியருக்கு முதிர்ச்சியடைந்த சிறப்பு வழங்கும் திட்டமும் முதல்வர் துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1500ம், 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இந்த தொகை தமிழ்நாடு மின்விசைநிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, 12ம் வகுப்பு முடிக்கும் போது வட்டியுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2011-12ம் நிதியாண்டிற்கு ரூ.313கோடியே 13 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2012-13ம் நிதியாண்டிற்கு ரூ.353 கோடியே 56 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 6 புதிய வாகனங்களும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு 9 வாகனங்களை முதல்வர் வழங்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...