பழைய விதிமுறைகளின்படியே எம்.பி.பி.எஸ். தேர்வு முடிவுகள் நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் உறுதி

இந்த ஆண்டு தேர்வு எழுதிய எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பழைய விதிமுறைகளே பின்பற்றப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான தகுதி மதிப்பெண்களில் மாற்றம் செய்து மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய விதிமுறைகளை
உருவாக்கியது. இந்த ஆண்டு ஆகஸ்டில் முதலாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இந்த புதிய விதிமுறைகள் அடிப்படையில் அண்மையில் வெளியிடப்பட்டன. இதனால் தேர்வில் 60 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் தாங்கள் புதிய விதிமுறைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்திய மருத்துவக் கவுன்சில் விதிபல்கலைக்கழகத்தின் புதிய விதிமுறைகளை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மாணவர்கள் தங்கள் மனுக்களில் கோரியிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் கே. சிவசங்கீதா எழுதிய கடிதம் ஒன்றை பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நர்மதா சம்பத் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதில், கடந்த ஆகஸ்டில் தேர்வு எழுதிய எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட மாட்டாது. ஏற்கெனவே பின்பற்றப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்தக் கடிதத்தில் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இந்த உறுதிமொழியைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஏற்கெனவே பின்பற்றப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படியே இந்த ஆண்டு முதலாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கினை முடித்து வைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...