டெங்குக்கு இலவசமாக கிடைக்குது "மூலிகை சர்பத்'

மேலூர் அரசு சித்த மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் "மூலிகை சர்பத்'க்கு (இலவசம்) அமோக வரவேற்பு உள்ளது. மேலூர் பகுதியில், டெங்கு, மர்மக்காய்ச்சலுக்கு 43 பேர் பலியாகி உள்ளனர்; பலருக்கு காய்ச்சல்
அறிகுறி உள்ளது. காய்ச்சலை கட்டுப்படுத்த, இங்குள்ள அரசு சித்த மருத்துவமனையில், மூலிகை சர்பத் (கசாயம்) இலவசமாக வழங்கப்படுகிறது. இதை நோயாளிகள் மட்டுமல்லாமல், நோய் தாக்கம் இல்லாதவர்களும் பருகுகின்றனர்.
டாக்டர் அசோக்குமார் கூறுகையில், ""நில வேம்பு, சந்தனம், சுக்கு உட்பட 10 மூலிகைகள் கலந்து மூலிகை கசாயம் தயாரிக்கப்படுகிறது. காலையில், வெறும் வயிற்றில் பெரியவர்கள் 60 மில்லியும், சிறியவர்கள் 30 மில்லியும் பருக வேண்டும். காய்ச்சல் முற்றிலும் குணமாகும். இதுவரை பலர் பயனடைந்துள்ளனர்,'' என்றார். மூலிகை சர்பத்தை வாங்கி செல்வோரில் சிலர், கசப்பாக இருப்பதால் கொட்டி பாழாக்குகின்றனர். இதனால், தேவைப்படுவோருக்கு கிடைப்பது இல்லை. எனவே, வீணாக்காமல் பயன்படுத்த, டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...