மருத்துவ காப்பீடு விண்ணப்பம் அரசுத்துறை ஊழியருக்கு "கெடு'

"தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு, விண்ணப்பிக்காமல் உள்ள,
பெரும்பாலான அரசுத்துறை ஊழியர்கள், வரும், 30ம் தேதிக்குள் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்' என, கரூர் கலெக்டர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசினால், தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, புதிய மருத்துவக் காப்பீடு திட்டம், 1.7.12 முதல், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் கால அளவானது, கடந்த, 2012 ஜூலை, 1ம் தேதி முதல், வரும், 2016 ஜூன், 30ம் தேதி வரை, நான்கு ஆண்டு காலமாகும்.
நான்கு லட்சம் ரூபாய் வரை, குறிப்பிட்டுள்ள மருத்துவ அறுவைச் சிகிச்சை மற்றும் அது தொடர்பான மருத்துவச் செலவுகளுக்கு, கட்டணமில்லா சிகிச்சையை, தமிழக அரசால் தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் பெறலாம்.
மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக அடையாள அட்டை வழங்கும் பணி நடக்கிறது. எனவே, புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கான அடையாள அட்டையை பெற படிவம், 7ஐ பூர்த்திச் செய்து கடந்த மாதம், 31ம் தேதிக்குள் வழங்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
ஆனால், இதுநாள் வரை பெரும்பாலான துறைகளின் ஊழியர்களிடமிருந்து படிவங்கள் பெறப்படாமல் உள்ளது. அனைத்து ஊழியர்களும் விரைவில் உரிய படிவத்தை பூர்த்தி செய்து காலதாமதமின்றி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கரூர் என்ற முகவரிக்கு வரும், 30ம் தேதிக்குள் வழங்க, அந்தந்த மாவட்டத் துறை அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...