பல்கலையில் முறைகேடுகளை நிறுத்த வேண்டும் மாஜி ஆட்சிமன்ற குழு உறுப்பினர் அறிக்கை

அண்ணாமலை பல்கலையில் நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண முறைகேடுகளை முற்றிலும் களைய வேண்டும் என பல்கலை முன்னாள் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் லட்சுமிகாந்தன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
அண்ணாமலை பல்கலையில் நிதி நெருக்கடியால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது. இந்த பிரச்னையை
நிரந்தரமாக தீர்க்க நிதி ஆதாரத்தை உயர்த்துவது அவசியம்.
அளவுக்கு அதிகமாக ஆசிரியர், அலுவலர் நியமனங்கள், மாணவர் எண்ணிக்கையில் சரிவு, 6வது ஊதிய குழு பரிந்துரையின்படி அளித்த ஊதியம் மற்றும் செலவுகளால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
காரணமின்றி மூடப்பட்ட இளங்கலை பட்டப்படிப்புகளை மீண்டும் துவக்க வேண்டும், இன்ஜினியரிங் துறையில் ஏரோ நாட்டிக்ஸ், ஆர்க்கிடெக், மரைன் இன்ஜினியரிங், நானோ டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, அணுசக்தி கல்வி, விண்வெளி ஆய்வுக்கல்வி மற்றும் அதி நவீன படிப்புகளை துவக்கினால் வருவாய் அதிகரிக்கும்.
தேர்வு நடப்பதிலும், தேர்ச்சி முடிவு அறிவிப்பதில் முறைகேடுகளை நிறுத்தி நேர்மையாகவும், கண்டிப்பாகவும் நடத்தினால் பல்கலைகழக கல்வித் தரம் உயரும், மாணவர்களின் எண்ணிக்கை கூடும்.
பல்கலை கழகத்தில் அனைத்து நியமனங்களும் உடனடியாக நிறுத்த வேண்டும், ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் சிண்டிகேட் பலவீனமாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வியாளர்கள் சுதந்திரமாக செயல்படும் வகையில் சிண்டிகேட்டை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...