பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? : தீயணைப்பு துறை அறிவுறுத்தல்


Diwali, Festival of Lights, Wishes of joy, splendor and happiness during the celebration of Diwali animated banner தீபாவளி பண்டிகையின் போது, பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து, அனைத்து பள்ளிகளிலும் இறைவழிபாட்டு கூட்டத்தின் போது, விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீயணைப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறைக்கு, தீயணைப்புத் துறை
அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது, பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து, பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு, 10:00 முதல் காலை, 6:00 மணி வரை, பட்டாசு வெடிக்கக் கூடாது. பெற்றோர்கள் உதவியுடன் இறுக்கமான உடை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். "ராக்கெட்' பட்டாசை, சாலையின் ஒதுக்குப்புறம் மற்றும் வீட்டருகே உள்ள மைதானத்தில் வைத்து விட வேண்டும். அதிக மருந்து கொண்ட பட்டாசு வெடிக்க, பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது. இது போன்ற விழிப்புணர்வை, பள்ளிகளில் நடைபெறும் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...