இன சுழற்சி வாரியாக தேர்ச்சி பட்டியல் வெளியிட கோரிக்கை

இந்த ஆண்டு, ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள், இன சுழற்சி வாரியாக, விவரமாக, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஆனால், அக்., 14ல் நடந்த மறுதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை, இன சுழற்சி வாரியாக, எந்த விவரங்களையும், டி.ஆர்.பி.,
வெளியிடவில்லை.மறுதேர்வில் தேர்ச்சி பெற்ற, 19 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது. இறுதிப் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. எனவே, இன சுழற்சி வாரியான தேர்ச்சிப் பட்டியலை வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.டி.இ.டி., தேர்வு வழியாக, தேர்வு செய்யப்பட உள்ள, 22 ஆயிரம் ஆசிரியர்களையும், இன சுழற்சி வாரியாக பட்டியலை தயாரித்து வெளியிட வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன், இன சுழற்சி பட்டியலை வெளியிட்டால், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். எனவே, இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிட்ட பின், இன சுழற்சி பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவை தெரிவித்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...