பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவோம்: அமைச்சர்களுடன், மாணவர்கள் உறுதிமொழி

பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து, தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவோம் என சென்னையில் நடைபெற்ற பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில், அமைச்சர்களுடன், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு, அதிக ஒலி ஏற்படுத்தும் வெடியால் ஏற்படும் தீமைகள் மற்றும் விபத்தில்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு
நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சர் என்.ஆர். சிவபதி, உறுதிமொழி வாசகத்தை படிக்க அதைத் தொடர்ந்து, மாணவர்களும் உறுதிமொழி ஏற்றனர்.
இதன்பின்னர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:
தீபாவளியையொட்டி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆண்டுதோறும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதோடு, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு, ஒலி அளவுகள் மற்றும் காற்றின் தர அளவுகளை மாதிரிகள் சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர்.
ஆய்வில், ஒலி அளவானது அயனாவரம் பகுதியில் மிக அதிக அளவாக 85.2 டெசிபலும், தியாகராய நகரில் 74.9 டெசிபல் என குறைந்த அளவிலும் அறியப்பட்டது. இந்த வருட ஆய்வுகள் ஐந்து இடங்களில் (திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், அயனாவரம், செüகார்பேட்டை மற்றும் தியாகராய நகர்) நடைபெற உள்ளன.
எனவே, பொது மக்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அதிக ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். குறைந்த ஒலி எழுப்பும் பட்டாசுகளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றார் அமைச்சர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசார ஆட்டோக்களை கொடியசைத்து அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியின்போது மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, எம்.எல்.ஏ. ஜி.செந்தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...