பெற்றோர் விருப்பத்தை குழந்தைள் மீது திணிக்கக் கூடாது

:""எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களை உருவாக்க சிறந்த கல்வி வழங்குவது பெற்றோர்கள் மற்றும் நமது சமுதாயத்தின் கடமையாகும்'' என என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா பேசினார்.என்.எல்.சி., சார்பில் நெய்வேலி வட்டம் 10ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில் குழந்தைகள் தினவிழா
கொண்டாடப்பட்டது. என்.எல்.சி., கல்வித் துறை அதிகாரி கோவிந்தராஜிலு தலைமை தாங்கினார்.
மின்துறை செயல் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.நெய்வேலி பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா பரிசு வழங்கி பேசியதாவது:பெற்றோர்களின் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிப்பதற்கு மாறாக அவர்களுக்கு விருப்பம் உள்ள துறைகளை அவர்கள் தேர்ந்தெடுக்க வழிகாட்ட வேண்டும்.

அவர்களுக்கு விருப்பப்பட்ட துறைகளை தேர்ந்தெடுத்த பின்னர் அது எதுவாக இருப்பினும் அதில் மிகச் சிறந்த நிபுணராக வருவதற்கான வழிகளை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும்.
நமது நாடு எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களை உருவாக்க சிறந்த கல்வி வழங்குவது பெற்றோர்கள் மற்றும் நமது சமுதாயத்தின் கடமையாகும். அந்த வகையில், குழந்தைகளுக்கு சமுதாயம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நிறைவேற்றும் வகையில் என்.எல்.சி., நிறுவனம் கல்வி மேம்பாட்டிற்காக குறிப்பாக, நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அவர்களது கல்வி மேம்பாட்டிற்காகவும் பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு சரத்குமார் ஆச்சார்யா பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...