ஏ.இ.இ.ஓ.,க்கள் மூலமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்

" ஏ.இ.இ.ஓ., மூலமே, பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் கூறினார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மேலாண் குழு பயிற்சி குறித்த ஆயத்த முகாம், மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடந்தது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ்
தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் அல்லிமுத்து வரவேற்றார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விளக்கி பேசினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார், முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
பள்ளி மேம்பாட்டுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பது குறித்து, மேலாண் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே, பள்ளி வளர்ச்சி பெறும். பயிற்சியில் கூறக்கூடிய கருத்துக்களை நன்றாக தெரிந்து கொண்டு, உறுப்பினர்களுக்கு புரியும் வகையில், பயிற்சியாளரை தயார் படுத்த வேண்டும்.
பள்ளி மேலாண் குழு உறுப்பினர்களுக்கு புரியும் வகையில், பயிற்சி அளிப்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டு அதன்படி பயிற்சி சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் அளிக்க வேண்டும். பயிற்சியை கடமைக்காக இல்லாமல், பயனுள்ளதாக மாற்ற வேண்டும்.
அரசு பள்ளிகளில் உள்ள பழுதான மற்றும் பாழடைந்த கட்டிடங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை கண்டறிந்து, அக்கட்டிடம் யாரால், எப்போது கட்டப்பட்டது என்பன போன்ற விபரங்களை, அனைத்து தொடக்கக் கல்வி அலுவலர்கள் சேகரித்து அறிக்கை வழங்க வேண்டும். ஏ.இ.இ.ஓ., மூலமே, பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்டத்தில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...