வங்கியில் கல்விக் கடன் கிடைக்காததால் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை-DINAMANI NEWS

கல்விக் கடன் பெற விண்ணப்பித்து 5 மாதங்களாகியும் கிடைக்காததால் மனவேதனை அடைந்த பொறியியல் கல்லூரி மாணவர், புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள தேவம்பாளையத்தைச் சேர்ந்தவர் 
டீக்கடைத் தொழிலாளி காளியப்பன். இவரது மகன் சண்முகசுந்தரம் (21), டிப்ளமோ படித்து முடித்து, கோவை, நீலம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில்
இந்த ஆண்டு கணினி பொறியியல் படிப்பில் 2-ம் ஆண்டில் சேர்ந்தார்.
சண்முகசுந்தரம், குன்னத்தூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனக்கு கல்விக் கடன் வழங்குமாறு கேட்டு விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்து 5 மாதங்களாகியும் அவருக்கு கல்விக் கடன் கிடைக்கவில்லையாம்.
இதனால், கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த இயலாமல் சண்முகசுந்தரம் மனவேதனையுடன் காணப்பட்டாராம். இந்நிலையில், புதன்கிழமை அவர், வங்கிக்குச் சென்று கல்விக் கடன் தொடர்பாக வங்கி மேலாளரிடம் முறையிட்டாராம்.
பிறகு வீடு திரும்பிய சண்முகசுந்தரம் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. உறவினர்களால் மீட்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அன்றிரவு இறந்தார்.
இது தொடர்பாக அவரது தந்தை காளியப்பன் குன்னத்தூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார். அதில், கல்விக் கடன் கிடைக்காததால் தனது மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குன்னத்தூர் போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வங்கியாளர்கள் மாதாந்திரக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கு.கோவிந்தராஜ், "கல்விக் கடன் கேட்டு வரும் மாணவர்கள், பெற்றோரை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது. கல்விக் கடன் தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பரிந்துரைகளை வங்கிகள் உதாசீனப்படுத்தக் கூடாது' என்று அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கல்விக் கடன் கிடைக்காமல் மாணவர் சண்முகசுந்தரம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், மாணவர், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...