10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவு: டிச. 24 வெளியீடு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை (டிச. 24) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை பிற்பகலில் இந்த முடிவுகள் வெளியிடப்படும்.
தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை
ஜனவரி 2 முதல் 4 வரை தேர்வு எழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் மற்றும் மார்ச் 2013 பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நாள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்த தனித் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...