பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 1000 பள்ளிக்கு நோட்டீஸ்

மாணவர்களுக்கு பாதுகாப்பு உட்பட  கல்வித்துறை விதிகளை பின்பற்றாத 1000 தனியார் பள்ளிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதால், இப்பள்ளிகளில் படித்து வரும் 4 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ என 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ரூ.1.50 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். ரூ.2.50 லட்சம் ஆசிரியர்கள்
பணியாற்றுகின்றனர். கடந்த 2004ம் ஆண்டு, கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானதை தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு கடும் பாதுகாப்பு விதிகள் வகுக்கப்பட்டன.நீதியரசர் சம்பத், முன்னாள் சென்னை பல்கலை. துணை வேந்தர் சிட்டிபாபு குழுக்களின் பரிந்துரைப்படி தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் அமைவிடம் குறித்த விதிமுறைகள் பரிந்துரைக்கப்பட்டன. அதாவது, மாநகராட்சி எல்லைக்குள் நடத்தப்படும் பள்ளிகளுக்கு குறைந்தபட்சம் 6 கிரவுண்டு நிலம் இருக்க வேண்டும்.

நகராட்சி எல்லையாக இருந்தால் 8 கிரவுண்டு நிலமும், மாவட்ட தலைநகரங்களில் பள்ளி நடத்த 10 கிரவுண்டு நிலமும், பேரூராட்சி பகுதிகளில் பள்ளிகள் செயல்பட 1 ஏக்கர் நிலமும், கிராம ஊராட்சியாக இருந்தால் 3 ஏக்கர் நிலப்பரப்பளவும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். இத்துடன் போதுமான ஆசிரியர்கள், வகுப்பறை வசதி, கழிப்பறை வசதிகள், ஆய்வகம், விளையாட்டு மைதானம் மற்றும் தீத்தடுப்பு சாதனங்கள் இருக்க வேண்டும்.இந்த விதிகளை பின்பற்றாத ஆயிரம் பள்ளிகளுக்கு தற்போது தொடர் அங்கீகாரம் வழங்காமல் பள்ளிக் கல்வித்துறை நிறுத்தி வைத்துள்ளது. தொடர் அங்கீகாரம் இல்லாததால், ஆயிரம் பள்ளிகளில் பயிலும் எஸ்எஸ்எல்சி மாணவர்கள் 2.50 லட்சம் பேரும், பிளஸ் 2 மாணவர்கள் ரூ.1.50 லட்சம் பேரும், வரும் 2013ம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதம் நடக்க உள்ள எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறையும் விளக்கம் கேட்டு பள்ளிகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்நடவடிக்கைக்கு தனியார் பள்ளிகள் தரப்பில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.தொடர் அங்கீகாரம் இல்லாததைக் காரணம் காட்டி அரசுத் தேர்வுகள் துறை பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலை வாங்க மறுக்கிறது. அங்கீகாரம் பெறாவிட்டால் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். பள்ளி வாகனங்களை இயக்குவதிலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஜூன் மாதத்துக்குள்
அங்கீகாரம் பெற வேண்டும்
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை தரப்பில் கேட்டபோது, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்ய முடியாது. தொடர் அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களும் பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அரசு விதிகளை பின்பற்றி 2013-ஜூன் மாதத்திற்குள் அனைத்து தனியார் பள்ளிகளும் தொடர் அங்கீகாரம் பெற வேண்டும், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...