திருப்பதியில் சுவாரசியம் 12.12.12.12.12ல் ஆண் குழந்தைக்கு தந்தையான கல்லூரி மாணவர்


ஆந்திர மாநிலம் அனந்தப்பூரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி காயத்ரி. திருப்பதியில் ஒரு தனியார் கல்லூரியில் ராஜசேகர் படித்து வருகிறார். இதனால், தம்பதியினர் கரக்கம்பாடி ராமா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு
எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், நிறை மாத கர்ப்பிணியான காயத்ரிக்கு, கடந்த 9ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், அவரை திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று மதியம் 12.12 மணிக்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.இது குறித்து ராஜசேகர் கூறுகையில்,  என் மனைவி காயத்ரிக்கு இந்த மாதம் 20ம் தேதிதான் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் கூறியிருந்தனர். ஆனால், 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் அரிய, அபூர்வ நாளான இன்று 12-12-12ம் தேதி, மதியம் 12.12 மணிக்கு குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அபூர்வ நாளில் பிறந்த என் குழந்தையை டாக்டர் ஆக்குவேன் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...