ரூ.13.40 லட்சம் தையல் கூலி பாக்கி : கள்ளர் பள்ளிகளுக்கு சீருடை நிறுத்தம்

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், தையல் தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு, 13.40 லட்ச ரூபாய் தையல் கூலி பாக்கி உள்ளதால், கள்ளர் சீரமைப்பு துறையை சேர்ந்த,
35 ஆயிரம் மாணவர்களுக்கு, அரசு சீருடைகள் வழங்கப்படவில்லை.

பள்ளிகளுக்கு தற்போது, அரையாண்டு தேர்வு துவங்கி விட்டது. அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மூன்று, "செட்' சீருடைகள் வழங்கப்பட்ட நிலையில், கள்ளர் சீரமைப்பு துறைக்கு உட்பட்ட, 265 பள்ளிகள், 52 விடுதி மாணவர்களுக்கு, இதுவரை ஒரு, "செட்' சீருடை கூட வழங்கவில்லை. இதற்கு, 2008ம் ஆண்டு முதல், சீருடைகள் தைத்துக் கொடுத்த கூட்டுறவு சங்கங்களுக்கு, தையல் கூலி கொடுக்காததே காரணம்.

மதுரை கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை, அங்கையற்கண்ணி தென் மண்டல தையல் தொழில் கூட்டுறவு சங்கம், கோரிப்பாளையம் மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கம் சார்பில், இத்துறை மாணவர்களுக்கு, சீருடைகள் தைக்கப்படுகின்றன. இரு சங்கங்களுக்கும், 2008 முதல் 2010 வரை, 13 லட்சத்து 40 ஆயிரத்து 580 ரூபாய் தையல் கூலியை, மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை, இதுவரை வழங்கவில்லை. சங்கங்கள் அளித்த, "பில்'கள், உரிய காலத்திற்குள், அத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. அவை காலாவதியாகி விட்டன. தையல் கூலி வழங்காததால், சீருடைகள் தயாரிப்பு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கள்ளர் சீரமைப்பு துறை உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில சட்ட செயலர் சின்ன பாண்டியன் கூறுகையில், ""இத்துறை மாணவர்களின் சீருடைகளுக்கு ஆகும் செலவை, பள்ளிக் கல்வித் துறையே வழங்கவேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு, தையல் கூலி பாக்கியை உடனடியாக வழங்கி, மாணவர்களுக்கு சீருடைகள் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

தையல் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த சிலர் கூறியதாவது: சங்க உறுப்பினர்களாக உள்ள, மகளிர் அனைவரும், ஏழ்மை நிலையில் உள்ளோம். சீருடைகள் தைப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள், வெளிச்சந்தையில் வாங்கி தயாரித்துள்ளோம். கடந்த, 2008 முதல் கூலி வழங்காததால், வாழ்வாதாரம் பாதித்துள்ளது. சீருடைகள், தைப்பதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கும் தையல் கூலிக்கு நிகராக, இத்துறையும் கூலி நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...