தொழிற்சாலையில் வேலை செய்த குழந்தை தொழிலாளர் 14 பேர் மீட்கப்பட்டனர்


ஜஹாங்கீர்புரி பகுதியில் உள்ள ஒரு வளையல் தொழிற்சாலையில், கடத்தி வரப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாக, உதவி கலெக்டர், போலீஸ் மற்றும் தொழி லாளர் நலத் துறைக்கு ‘பச்பன் பச்சோ அந்தோலன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்
ஒன்று தகவல் கொடுத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் துணை கலெக்டர் ராஜிந்தர் குப்தா தலைமையில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், அந்த பகுதியில் உள்ள குறிப்பிட்ட அந்த வளையல் தொழிற்சாலைக்கு சென்று சோதனை போட்டனர். அப்போது அங்கு 6 முதல் 15 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள்
உயிருக்கு ஆபத்தான வேலைகளை செய்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் பீகாரில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கடத்தி வரப்பட்டவர்கள் என்பது தெரிந்தது. அந்த குழந்தை தொழிலாளர்களை போலீசாரும் மற்றும் அதிகாரிகளும் மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. அனை வருக்கும் தேவையான சிகி ச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரித்து சிறுவர்களை கடத்தி வந்தவர்கள் பற்றி வருகின்றனர்.டெல்லியில் கடந்த 2 நாட்களுக்கு முன் பல் வேறு தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 18 குழந்தை தொழிலாளர்களை போலீசார் மீட்ட னர் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...