"மூன்றாம் பருவம்: வரும் 15-க்குள் 2.17 கோடி புத்தகங்கள் தயார்'

மூன்றாம் பருவத்துக்கான 2.17 கோடி புத்தகங்கள் வரும் 15-ம் தேதிக்குள் அச்சிடப்பட்டுவிடும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
முப்பருவ முறையில் மூன்றாம் பருவம் ஜனவரி மாதம் தொடங்குகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவ புத்தகங்களை அச்சிடும் பணி கடந்த மாதம் தொடங்கியது.
புத்தகங்கள் அச்சிடும் பணி தொடர்பாக
பாடநூல் கழக வட்டாரங்கள் கூறியது:
ஒவ்வொரு வகுப்புக்கும் தலா 2 புத்தகங்கள் என மூன்றாம் பருவத்துக்கு மொத்தம் 2.17 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இதில் 1 கோடியே 40 லட்சம் புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக வழங்கப்படும் இலவச புத்தகங்கள் ஆகும். தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பதற்காக 77 லட்சத்து 65 ஆயிரம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
புத்தகங்களை அச்சிடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 15-க்குள் புத்தகங்களை அச்சிடும் பணி நிறைவு பெறும். மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு இந்தப் புத்தகங்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
9-ம் வகுப்பு புத்தகங்கள்: அடுத்த கல்வியாண்டில் 9-ம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகமாகிறது. இதையடுத்து, 9-ம் வகுப்பு முதல் பருவத்துக்கான நூல்கள் டிசம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு அச்சடிக்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான புத்தகங்கள் டிசம்பர் இறுதியில் அச்சிடுவதற்காக வழங்கப்படும். பிப்ரவரி இறுதிக்குள் இந்தப் புத்தகங்கள் அச்சிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...