15 கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
7-வது ஊதிய கமிஷனை உடனடியாக அமைக்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள சுமார் 12.5 லட்சம் ஊழியர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அஞ்சல்துறை, கணக்கு தணிக்கைத் துறை, கல்பாக்கம் அணுமின் நிலையம், சாஸ்திரி பவன் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் சுமார் 1.5 லட்சம் பேர் வேலைநிறுத்தம் செய்தனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலானவர்கள் அஞ்சல்துறை ஊழியர்கள் என்பதால், அந்த துறையின் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. மேலும் சென்னையில் உள்ள வருமான வரித்துறை, ஆயத்தீர்வைத் துறை ஆகிய முக்கிய மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.  இதனால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களும் போராடி வருகின்றனர். ஆனால், அவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.
இந்த துறைகளை சேர்ந்த தொழிற்சங்கத்தினர், தங்கள் அலுவலகம் முன்பாக உணவு இடைவேளைக்குப் பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...