டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு 1,750 கோடி நிதி

நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 1,750 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை எடுத்து கூறி தேவையான நிதியை தமிழக அரசு பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மலேரியா போன்றவை சீசன் போல வந்துவிட்டு 2 அல்லது 3 மாதங்களில் சென்றுவிடும்.

ஆரம்பத்திலேயே சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தொடங்கிய டெங்கு காய்ச்சல், படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் பரவியது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான எலிசா பரிசோதனை செய்யப்பட்டது. 9,250 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டங்களை நடத்தினார்.

சென்னையிலும் தென்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் மாநிலங்களுக்கு டெங்கு தடுப்புக்காக நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஸி1,750 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது என மத்திய அரசே கூறியிருப்பதால் தமிழகத்துக்கு அதிகம் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘தமிழகத்துக்கு கூடுதலாக நிதி வழங்குமாறு மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாதிடம் கோரிக்கை வைத்தோம். பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். இதுவரை அதிகாரபூர்வமாக தகவல் எதுவும் வரவில்லை’’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...