19 அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் தொடக்கம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 19 அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
 சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக அரசின் உத்தரவின் பேரில், இந்த சுற்றுச்சூழல் மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
 அதன்படி, சோகண்டி, சிறுமையிலூர், பரமேஸ்வரமங்கலம், செம்மஞ்சேரி, கடப்பாக்கம், கரும்பாக்கம், அனுமந்தபுரம், பூதூர், கெர்டூர், கடுக்களூர், முதலியார்குப்பம், ரத்தினமங்கலம், கருநீலம், காரணைபுதுச்சேரி, அஸ்தினாபுரம், வீராபுரம் ஆகிய 16 அரசு உயர்நிலைப்பள்ளிகளிலும், நெரம்பூர், பட்டிபுலம், பதுவஞ்சேரி ஆகிய கிராமங்களில் உள்ள 3 அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 19 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 சுற்றுச்சூழல் மன்றத்தின் பணிகள் என்ன?
 இந்த மன்றத்தை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதே போல், பள்ளிகளில் ஒரு ஆசிரியர் இந்த மன்றத்துக்கு தலைமை ஏற்பார். இவருக்கு கீழ் குறைந்தது 25 மாணவ, மாணவிகள் மன்றத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பார்கள்.
 ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து ஏற்படுத்தும் விழிப்புணர்வுகளை, மாணவர்கள் பொதுமக்களிடம் சேர்க்க வேண்டும்.
 மேலும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.
 இம்மன்றத்தின் தொடக்க விழா கடந்த செவ்வாய்கிழமை (நவ. 27) செங்கல்பட்டு தூய கொலம்பாஸ் மேல்நிலைப்பள்ளியில்
 நடைபெற்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...