அமெரிக்க கணிதப் பேராசிரியர்கள் 3 பேருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

கணித மேதை ராமானுஜத்தின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு, அமெரிக்க கணிதப் பேராசிரியர்கள் 3 பேருக்கு கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கணித மேதை ராமானுஜத்தின் 125-வது பிறந்த நாளையட்டி,
கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் டிச. 14, 15 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
கருத்தரங்கில் அமெரிக்கா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து கணிதப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை சிறப்பு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் சேதுராமன் வரவேற்றார்.
பின்னர் எண் கோட்பாட்டு அறிவியலில் சிறந்த ஆராய்ச்சி செய்தமைக்காக அமெரிக்க நாட்டின் பெனின்சுலேவேனியா மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஆண்ட்ரூஸ், விஸ்கன்சின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிச்சர்டுஆஸ்கி, இல்லியனாஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் புரூஸ்பெர்னட் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை ஓய்வுபெற்ற கணிதப் பேராசிரியர் ராஜகோபாலன் வழங்கினார்.
தொடர்ந்து, அமெரிக்க கணிதப் பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி மற்றும் கணித ஆராய்ச்சியாளர்களால் தொகுக்கப்பட்ட ராமானுஜன் ஆராய்ச்சி நாளேட்டின் சிறப்பு பதிப்பும், உலக கணித வரலாற்றில் ராமானுஜனின் பங்களிப்பு என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
முனைவர் சுவாமிநாதன், சீனிவாச ராமானுஜன் மைய புலத்தலைவர் ரகுநாதன், முனைவர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், துணைப் பதிவாளர் சுரேஷ், நிர்வாக அலுவலர் ராஜகோபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...