ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைத்து 30 நிமிடம் மாணவர்கள் படிக்க வேண்டும் : அப்துல் கலாம் "அட்வைஸ்'

ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர் உதவியுடன், ஒரு சிறிய நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்
பேசினார். உடுமலை கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப்பள்ளியில், எஸ்.கே.பி., கல்வி நிறுவனங்களின் நூற்றாண்டு விழா, மற்றும் பள்ளியின் பொன்விழா மற்றும் கட்டடங்களின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கல்வி கழகம் டாக்டர் மோகன் பிரசாத் வரவேற்றார்.

விழாவில், "அரும்பெரும் சக்தியை கண்டுணர்ந்து வெற்றி பெறுவேன்' என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது: நான் எனது வாழ்வில், ஆசிரியர்களிடமிருந்து கற்றுக்கொண்டது, அரிய சில அருமையான புத்தகங்கள் என் வாழ்வின் எண்ணங்களை மாற்ற உதவியாக இருந்தது. எனவே, மாணவர்கள் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை அன்றே படித்து, எழுதி பார்ப்பதுடன், உள்மனதில் ஓவியம் போன்று பதிய வேண்டும்; வீட்டில் பெற்றோர் உதவியுடன் ஒரு சிறு நூலகம் அமைத்து, தினமும் 30 நிமிடமாவது படிக்க வேண்டும். விடா முயற்சியிருந்தால், தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும். என்னால் எதை கொடுக்க முடியும் அல்லது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை இளைஞர்கள் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும். உறக்கத்திலே வருவதல்ல கனவு; உன்னை உறங்காவிடாமல் செய்வதுதான் கனவு. எனவே, இளைஞர்களின் வாழ்க்கையில் கடுமையாக உழைத்து, அறிவை தேடி, விடாமுயற்சி செய்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார். பள்ளி செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், கலாம் ஒரு சகாப்தம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...