அடுத்த ஆண்டு முதல் சத்துணவு திட்டத்தில் தினம் 60 லட்சம் முட்டை

தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு அடுத்த ஆண்டில் தினமும் 60 லட்சம் முட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.    தமிழகத்தில் சத்துணவு
திட்டத்தின் கீழ் மதிய உணவு, முட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2 வயது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படுகிறது.

 நடப்பாண்டில் பள்ளிகளில் 48.63 லட்சம் மாணவ, மாணவிகள் சத்துணவில் முட்டை சாப்பிட்டு வருகின்றனர். 2012,13ம் ஆண்டில் சுமார் 60 லட்சம் மாணவ மாணவிகளுக்கு தினமும் முட்டை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஒப்பந்த முறையில் முட்டை கொள்முதல் செய்யவுள்ளது. 590 மையங்கள் மூலமாக தினமும் முட்டை கொள்முதல் செய்யப்படும் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...