இ,பாஸ்புக் சேவை தொடக்கம் பி.எப். கணக்கு இருப்பு இணையதளத்தில் பார்க்கலாம்


இ,பாஸ்புக் சேவையை தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இதன் முலம் நாடு முழுவதும் உள்ள 5 கோடி உறுப்பினர்கள் தங்கள் கணக்கை ஆன்,லைனில் பார்த்துக்கொள்ள வசதி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய
வருங்கால சேமிப்பு நிதி ஆணையர் ஆர்.சி.மிஸ்ரா கூறியதாவது:
தற்போது தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி திட்டத்தில் (ஈபிஎப்) உறுப்பினராக இருந்து, அவரது கணக்கு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அத்தகையவர் ஒவ்வொரு மாதமும் இ,பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். www.epfindia.gov.in என்ற இணையதளத்தில் இந்த விவரங்கள் கிடைக்கும்.

பணியில் இருந்து விலகிய நிலையில், செயல்படாத நிலையில் இருக்கும் தங்கள் கணக்கு குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கும்போது, அவரது இ,பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழிலாளர் வருங்கால சேமிப்பு நிதி நிறுவனத்தின் உறுப்பினர் இ,பாஸ்புக் சேவையை பெற பான் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி இந்த இணையதளத்தில் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். செல்போன் எண்ணை கடவுச்சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்தலாம்.

ஒரு முறை பதிவு செய்துவிட்டால் அந்த உறுப்பினர் தனது பிஎப் கணக்கு எண்ணை ஆன்,லைனில் செலுத்தி இ,பாஸ்புக்கை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் எப்போதெல்லாம் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது, எப்போதெல்லாம் எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் கிடைக்கும். அறக்கட்டளைகள் மூலம் பிஎப் கணக்குகள் நிர்வகிக்கப்படும் உறுப்பினர்களுக்கு இந்த சேவை கிடைக்காது. ஒரு மொபைல் எண்ணிலிருந்து ஒரு பதிவு மட்டுமே செய்ய முடியும். அதேபோல ஒரு பிஎப் கணக்கு தொடர்பான விவரத்தை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...