தேர்வு நேரத்தில் தேவையற்ற விழா: மாணவர்கள் பாதிக்கப்பட்டுவதாக புகார்

தேர்வு நேரத்தில் தேவையற்ற விழாக்களால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தமிழக முதல்வருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, வக்கீல் பிரம்மா அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 அரசு பொது தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற கல்வித்துறை மூலம் அனைத்து
விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அரையாண்டு பொது தேர்வுகள் ஆரம்பமாகி நடக்கிறது. ஆனால் பள்ளி தேர்வுகளுக்கு இடைஞ்சலாக பள்ளிகளில் விழாக்களும், அதிகாரிகளுக்கு பாராட்டு விழாவும் நடந்ததால் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. எனவே, வருங்காலங்களில் தேர்வுகளுக்கு பாதிப்பு இல்லாமல் விழாக்களை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் தேர்வு பணிகள் பாதிக்காதவாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்காக இன்று (23ம் தேதி) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. வரும் 7ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி, வரும் 20ம் தேதி வரை பிளஸ் 2 அரையாண்டு பொது தேர்வுகளும் நடக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...