மத்திய அரசு முடிவு ஏழைகளுக்கு இலவச செல்போன்


நேரடி பண பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 40 கோடி பேருக்கு நவீன வசதிகளுடன் கூடிய இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறும் ஏழைகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மானிய தொகையை செலுத்தும் நேரடி பண
பரிமாற்ற திட்டத்தை வரும் ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழைகளுக்கு நவீன வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போனை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ஆதார் கார்டு அடிப்படையில் இந்த செல்போன்கள் ஏழைகளுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு வங்கியில் கணக்கும் இருக்க வேண்டும். இதற்காக மக்களுக்கு உதவுமாறு மாவட்ட நிர்வாகங்களை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

 இந்த செல்போனில் 100 மணி நேரம் இலவசமாக பேசும் வசதி, 500 இலவச எஸ்எம்எஸ், இலவச இன்டர்நெட் மற்றும் குறைந்த வாடகை திட்டம் போன்ற வசதிகள் இருக்கும். மொபைல் பேங்கிங் வசதியும் செல்போனில் இருக்கும். பயனாளிகளுடன் அரசு நேரடியாக தொடர்பு கொள்ள இலவச செல்போன் திட்டம் பயன்படும் என்றும் வங்கி கணக்கில் அரசின் மானிய தொகை டெபாசிட் செய்யப்பட்டதும் பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், ரேஷனில் பொருட்கள் வாங்கியதும் அது குறித்து தகவலும் பயனாளிகளுக்கு அனுப்பப்படும். இத்திட்டத்துக்காக மத்திய அரசுக்கு ரூ.7,000 கோடி செலவாகும். இதற்கான நிதியில் 50%ஐ தொலை தொடர்புதுறையும் மீதி 50%ஐ செல்போன் சேவை நிறுவனமும் வழங்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...