ஆசிரியர்கள் சம்பள பட்டியல் "சாப்ட்வேரில்' குளறுபடி

தமிழகத்தில், மூன்று மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட சம்பள கணக்கு "சாப்ட்வேரில்' உள்ள குளறுபடியால், மூன்று மாதங்களாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் நிலுவை தொகையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். திருச்சி, தேனி, ராமநாதபுரம்
மாவட்டங்களில் அனைத்து துறைகளிலும், சம்பள பட்டியல் தாக்கல் செய்ய, 8.21 "வெர்சன்' என்ற புதிய "சாப்ட்வேர்' 3 மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஓய்வூதியதாரர்கள் ஈட்டிய, ஈட்டா விடுப்பு பெறுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், சி.பி.எஸ்., சில் பொது, எய்டட், ஊராட்சி, நகராட்சி என, நான்கு வகை இருக்கும்.

தற்போது, ஊராட்சி, நகராட்சி என்ற தலைப்புகள் எய்டட் தலைப்பில் வருவதால், எதிர்காலத்தில் இவைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய சாப்ட்வேரில் அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி தொகை ஐந்து "டிஜிட்டிற்கு' மேல் சென்றால், சாப்ட்வேர் ஏற்றுகொள்வதில்லை. தற்போது ஆசிரியர்கள் பெரும்பாலும், அடிப்படை சம்பளம் 25 ஆயிரத்திற்கு மேல் பெறுவதால், அகவிலை மற்றும் வீட்டுவாடகைப்படி ஐந்து டிஜிட்டிற்கு மேல் வருகிறது. இதனால், பில் தயார் செய்ய முடியவில்லை. கடந்த 31.10.2012 முதல் ஓய்வு பெற்ற பல ஆசிரியர்கள் ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்பு பணம் பெறமுடியாமல் உள்ளனர். மேலும் ஆசிரியர்களின், பங்களிப்பு ஓய்வூதியம் உரிய கணக்கில் செல்லாமல், வேறு கணக்கில் செல்வதால் பெரும் பிரச்னை ஏற்படவாய்ப்புள்ளது. இந்தநிலை, மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ளது. இதை சென்னை கணக்கு துறையிலிருந்து தான் சரி செய்ய முடியும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...