சி.சி.இ., முறையில் பாடமெடுக்க புதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை

"தொடர், முழு மதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்" என, புதியதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
தமிழகத்தில் டி.இ.டி., தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை, பி.எட்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு,
சென்னையில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையை வழங்கினார்.
கிடைத்த பணியிடங்களில் பொறுப்பேற்கும் முன், முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், மீண்டும் ஒரு முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, புதிய ஆசிரியர்களுக்கு பாடமெடுப்பது, மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி முறையான தொடர் மற்றும் முழுமதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் செயல்முறை விளக்க படங்களுடன் பாடம் நடத்த, புதிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...